பிரியந்த குமாரவின் பூதவுடல் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

By Vishnu

07 Dec, 2021 | 08:26 AM
image

பாகிஸ்தானின் சியால்கோட்டில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று மாலை பாகிஸ்தானின் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந் நிலையில் பூதவுடல் இன்று அதிகாலை 3 மணியளவில் கனேமுல்லயில் அமைந்துள்ள அவரது இல்லத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right