2232/ 35 என்ற தொடரிலக்கத்தினை உடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் 2021ஆம்ஆண்டு ஜுன் 18ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவாமற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி.திவாரத்ன, எம்.எம்.மொஹமட், கே.பீ.பீ.பத்திரண,ஜீவன் தியாகராஜா ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. 

இலங்கை சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 98ஆவது சரத்தின் 8ஆவது உப பிரிவின்கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த விசேடவர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது.

அதில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவும் அரசியலமைப்பின்97ஆவது மற்றும் 98 ஆவது சரத்தின் முதலாவது ஆவது உப பிரிவில் கூறப்பட்டுள்ளதற்கு அமைவாகவும்இலங்கையில் உள்ள ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியுள்ளஉறுப்பினர்களின் எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கு தற்போது காணப்படுகின்ற ஏழுமக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையானது ஆறாக குறைக்கப்பட்டுள்ளதோடு, கம்பஹா தேர்தல் மாவட்டத்தில்18ஆக இருந்த மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 19ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது. 

வடமாகாணத்தில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 12ஆண்டுகளாகியுள்ளன. 

இந்த நிலையில் 1989ஆம் ஆண்டு 9ஆவது பாராளுமன்ற தேர்தலில் 11ஆக இருந்த மக்கள் பிரதிநிதிகளின்எண்ணிக்கை 1994இல் 10ஆக குறைவடைந்தது. 

பின்னர் 2000, 2001, 2004, 2010 ஆகிய பாராளுமன்றதேர்தல்களில் 9 ஆக காணப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-12-05#page-24

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/