கார்வண்ணன்

“இலங்கையுடனான பொருளாதார ஒத்துழைப்பகள், உதவிகள் குறித்தபேச்சுக்களை, இந்தியா தனியே நிதியமைச்சுடன் மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை,வெளிவிவகார அமைச்சின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் இணைந்த ஒன்றாக  செயற்படுத்தவே முனைகிறது” 

நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பஷில் ராஜபக்ஷ தனது முதல்வெளிநாட்டுப் பயணத்தை கடந்தவாரம் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தார்.

அவரது இந்தப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பஷில்ராஜபக்ஷ சந்தித்திருக்கவில்லை. இவ்வாறு சந்திக்காமை, இந்தியா செய்தியொன்றைராஜபக்ஷவுக்கவினருக்கு வலுவான  செய்தியை சொல்வதாக இருக்கலாம்.

மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ள சூழலில்,இந்தியாவின் உதவியுடன் சற்று மீட்சி பெறுவதற்கான சூழலை உருவாக்குவது தான், பஷில்ராஜபக்ஷவின் இந்தப் பயணத்தின் இலக்காக இருந்தது.

2020 இல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்தியப் பிரதமர் மோடியும்நடத்திய பேச்சுக்களில் இணங்கப்பட்ட 1 பில்லியன் டொலர்கள் நாணயமாற்று வசதி உள்ளிட்டநிதி  உதவிகளை பெற்றுக் கொள்வது பஷில் ராஜபக்ஷவின்பயணத்தின் முக்கியமான நோக்கமாகும்.

போர்க்காலத்தில் பஷில், கோட்டா, லலித் வீரதுங்கவை உள்ளடக்கிய மூவரணி,இந்தியாவின் எம்.கே.நாராயணன், சிவ்சங்கர் மேனன், விஜய்சிங் ஆகியோரை உள்ளடக்கியஇந்தியாவின் மூவரணியுடன் சேர்ந்து, தடைகளை நீக்கிக் கொடுக்கும் பணியை வெற்றிகரமாகமுன்னெடுத்திருந்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/