முஸ்லிம்கள் மத்தியில் மேலெழும் சிந்தனை

By Digital Desk 2

06 Dec, 2021 | 07:14 PM
image

எம்.எஸ்.தீன் 

 “அடக்குமுறை நடவடிக்கைகளை தோற்கடித்து, தேசியப் பிரச்சினைக்குநியாயமான தீர்வைக் காண்பதற்காக தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியதன்அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர்கள் இலங்கைக்குவெளியிலும் சுட்டிக்காட்டியுள்ளனர்”

 முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும்சமூகத்தின் மீது அக்கறையின்றி, காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த ஆளுந் தரப்பினரின்எண்ணங்களுக்கு ஏற்ப சுய இலாபத்திற்காக செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக முஸ்லிம்கள்தமக்கான மாற்று அரசியல் சக்தியை நாட வேண்டியதொரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

 முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் செல்வதற்காக தேர்தல் காலத்தில்சமூகத்தின் உரிமைகள் குறித்தும், ஆட்சியாளர்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் பற்றியும்பேசிக் கொள்வதும், பின்னர் ஆட்சியாளர்களுடன் இணைந்து சமூகத்தை விலை பேசுவதுடன், ஆளுந்தரப்பினரின்பொம்மை போன்று செயற்பட்டுக் கொண்டிருப்பது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

 இதேவேளை, பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மாற்றுஇனத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற போது, அதனைக்கூட அங்கிகரிக்காது, அத்தகையவர்களுக்குஎதிராக அறிக்கைகளை விடுக்கும் பிற்போக்கு அரசியலையே முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொண்டுவருகின்றார்கள். தான் செய்வதுமில்லை. 

மற்றவர்களை செய்யவிடுவதுமில்லை. தமது எல்லாச்செயல்களையும்  சமூகம் அங்கிகரிக்க வேண்டுமென்கின்றஎண்ணத்தையே முஸ்லிம் அரசியல்வாதிகள் கொண்டுள்ளார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right