கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் முற்பகல் 11 மணியளவில் பரந்தன் ஊடாக பூநகரிக்குத் திரும்பு பிரதான சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பூநகரி வீதியிலிருந்து A9 வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள், A9 வீதியில் பயணித்த ரிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது.
டிப்பரின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிளின் கைபிடியில் சிக்கி இழுத்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தேனுயன், பிலங்கர் என்றி 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM