சுபத்ரா

இஸ்ரேலிய இராணுவ கொமாண்டோக்கள்புயல் வீச செய்த உகண்டாவின் என்டபே விமான நிலையம் இப்போது சீனாவின் கையில் விழுமாஎன்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

இடி அமீன் ஆட்சிக்காலத்தில், 1976ஆம் ஆண்டுஜூன் மாத இறுதியில் இஸ்ரேலில் இருந்து பாரிசுக்கு சென்று கொண்டிருந்த எயர்பிரான்ஸ் விமானம் 248 பேருடன், கடத்தப்பட்டு, என்டபே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பலஸ்தீன போராளிக் குழுவினால்நடத்தப்பட்ட அந்தக் விமானக் கடத்தலுக்கு, உகண்டாவின்சர்வாதிகாரி இடி அமீனின் ஆசியும் ஆதரவும் இருந்தது.

அந்த விமானத்தில் இருந்த 94 இஸ்ரேலியர்கள் மற்றும், 12 விமானப் பணியாளர்களை பயணக் கைதிகளாக வைத்துக் கொண்டு, பலஸ்தீனத்தில்சிறைவைக்கப்பட்டுள்ள 40 பேரையும், ஏனைய நாடுகளின் சிறைகளில் உள்ள 13 பேரையும்விடுவிக்க வேண்டும் என்றும்- இல்லாவிட்டால் பயணக் கைதிகள் கொல்லப்படுவார்கள்என்றும் கடத்தல்காரர்கள் அச்சுறுத்தினர்.

கடத்தப்பட்டு ஒரு வாரம் கழித்துசுமார் 100 இஸ்ரேலிய கொமாண்டோக்கள் 4 ஆயிரம்கி.மீ தூரம் விமானங்களில் பயணம் செய்து, என்டபேவிமான நிலையத்தில் தரையிறங்கி திடீர் தாக்குதல் நடத்தி, பணயக்கைதிகளாக இருந்த 102 பேரை மீட்டனர். மூவர் உயிரிழந்தனர்.

இந்த நடவடிக்கையில்கடத்தல்காரர்கள் அனைவரும் உகண்டா படையினர் 45 பேரும்கொல்லப்பட்டதுடன், உகண்டா விமானப்படையின் 11 மிக் போர் விமானங்களையும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/