பிரியந்த குமாரவை காக்க முயன்ற நபருக்கு பாக். பிரதமர் வீர பதக்கம் வழங்குவதாக அறிவிப்பு

By Vishnu

06 Dec, 2021 | 11:04 AM
image

சியால்கோட்டில் தனது உயிரைப் பணயம் வைத்து கும்பலிடம் இருந்து இலங்கை தொழிற்சாலை மேலாளரை காப்பாற்ற முயன்ற நபருக்கு வீரப் பதக்கம் வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

மாலிக் அட்னான் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் தாக்குதலை முன்னெடுத்த ஒரு குழுவைத் தானே எதிர்கொண்டு, இலங்கை பிரஜை மீதான தாக்குதலை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

பின்னர் கும்பலிடம் இருந்து இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார காப்பாற்ற முயன்றார். 

இருப்பினும் அவரது தீவிர முயற்சி பலனளிக்காது போக தாக்குதல்தாரிகள் தமது கடவுளை அவமதித்ததாக கூறி, பிரியந்த குமார மீது மூர்க்கத்தனமான தாக்குதலை முன்னெடுத்து அவரது உடலை எரித்துக் கொன்றனர்.

இந் நிலையில் தனது உயிரைப் பணயம் வைத்து தாக்குதல் கும்பலிடம் இருந்து இலங்கை தொழிற்சாலை மேலாளரை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னான் என்ற நபருக்கு வீர பதக்கம் வழங்கப்படும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இம்ரான் கான் தனது டுவிட்டரில்,

"பாதிக்கப்பட்டவரை உடல் ரீதியாக பாதுகாக்க முயற்சிப்பதன் மூலம் தனது சொந்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது உட்பட, சியால்கோட்டில் கண்காணிப்பு கும்பலிடம் இருந்து பிரியந்த தியவடனாவுக்கு அடைக்கலம் கொடுக்கவும், காப்பாற்றவும் தன்னால் முடிந்தவரை முயற்சித்த மாலிக் அட்னானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலுக்கு தேசத்தின் சார்பாக நான் வணக்கம் செலுத்த விரும்புகிறேன், "நாங்கள் அவருக்கு தம்கா ஐ ஷுஜாத் விருதை வழங்குவோம்" என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right