ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஒரு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்திய-ரஷ்ய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி பிற்பகலில் டெல்லி செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்லும் புட்டினை பிரதமர் மோடி வரவேற்பார்.
பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு இராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்களும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து மோடி-புட்டின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாநாடு நிறைவடைந்ததும் புட்டின் நாடு திரும்புவார்.
இந்த மாநாட்டுக்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவும் சந்திக்கிறார்கள்.
இதைப்போல இந்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய இராணுவ அமைச்சர் செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசுகின்றனர்.
பின்னர் இந்த 4 அமைச்சர்களும் பங்கேற்கும் 2+2 பேச்சுவார்த்தையும் நடைபெறும்.
இந்த சந்திப்புகளில் பரஸ்பர, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருநாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM