கிளிநொச்சியில் மர்மப்பொருள் வெடிப்பு ; உயிரிழந்தவரின் சடலத்தை பரிசோதனையின் பின் ஒப்படைக்க உத்தரவு

By T. Saranya

06 Dec, 2021 | 09:54 AM
image

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற மர்மப்பொருள் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எஸ். கார்த்திகா  உத்தரவிட்டுள்ளார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி  உமையாள்புரம் சேலைநகர்  பகுதியில் வெடி பொருள் ஒன்றை  வீட்டில் வைத்து கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது  ஏற்பட்ட  வெடிப்பு சம்பவத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் குறித்த சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த வீட்டு வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான வெடி பொருட்களையும் பார்வையிட்டு அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுமாறும்  கட்டளையிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33