எஸ்.சதீஸ்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு கிவ் தோட்ட மக்கள் மற்றும் முச்சக்ர வண்டி சாரதிகள் ஆகியோர் இணைந்து ஆர்பாட்டமொன்றை இன்று (28) முன்னெடுத்திருந்தனர்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இருந்து கிவ் தோட்டத்திற்கு செல்லும் சுமார் 4 கிலோ மீற்றர் வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  டயர்களை எறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் மலையக அரசியல்வாதிகள் வெறுமனே வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி விட்டு செல்கிறார்கள் ஆனால் இந்த வீதி குறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லையென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

எனவே குறித்த வீதியை உடனடியாக செப்பனிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.