குற்ற விசாரணைப்பிரிவிடம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவ விசாரணைகளை ஒப்படைக்க அஞ்சுகிறதா அரசாங்கம் - முஜிபுர்

Published By: Digital Desk 4

06 Dec, 2021 | 06:27 AM
image

(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு நிறுவனமே பொறுப்பு கூற வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் , இது தொடர்பான விசாரணைகளை இதுவரையில் ஏன் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கவில்லை? இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுடைய பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டு விடும் அரசாங்கம் அஞ்சுகிறதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திடமும் ஜனாதிபதி மன்னிப்புக் கோர வேண்டும் -  முஜிபுர் ரகுமான் | Virakesari.lk

அத்தோடு அண்மையில் விநியோகிகப்பட்டு பின்னர் தடை விதிக்கப்பட்ட 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு என்ன ஆயிற்று என்று கேள்வியெழுப்பியுள்ள முஜிபுர் ரஹ்மான் , அவற்றில் மேலும் 3 கிலோ எரிவாயு மீள் நிரப்பப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகிறா என்றும் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் பதிவாகிக் கொண்டிருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரை அண்மித்த வெடிப்பு சம்பவங்களுக்காக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலகியிருக்க வேண்டும்.

தொடர்ந்தும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்ற போதிலும் , அது தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் ஏன் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கவில்லை?

அண்மையில் விநியோகிக்கப்பட்டு பின்னர் தடை விதிக்கப்பட்ட 18 லீற்றர் சிலிண்டர்கள் தற்போது எங்குள்ளன? அவை ஏன் மறைக்கப்பட்டுள்ளன? அந்த சிலிண்டர்களில் மேலும் 3 கிலோ கிராம் வாயு மீள் நிரப்பப்பட்டு 12.5 கிலோ சிலிண்டர்கள் விநியோகிகப்படுகின்றனவா? இந்த செயற்பாடுகளின் ஊடாக குற்றத்தை செய்வதற்கு இடமளித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை தெளிவாகிறது.

எனவே இவை தொடர்பான விசாரணைகளை குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைத்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த குற்றத்தை செய்யத் தூண்டிய அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாகவா அரசாங்கம் தயங்குகிறது? இவ்வாறான சூழலில் ஜனாதிபதியால் எவ்வாறு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும். கனவில் மாத்திரமே ஜனாதிபதியால் அதனை செய்ய முடியும்.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சின் கீழ் காணப்படுவதாலா அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமலுள்ளது? அவ்வாறெனில் அரசாங்கமே தற்போது குற்றவாளிகளைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் நிதி அமைச்சினாலேயே நியமிக்கப்படுகின்றனர்.

அதன் காரணமாகவா இந்த அதிகாரிகளும் லிட்ரோ நிறுவனமும் பாதுகாப்படுகிறது? உண்மையில் தற்போது அரசாங்கத்தின் தேவை இவர்களைப் பாதுகாப்பதா? அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவா சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ள? இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண வெடிப்பு சம்பவங்களுக்கு சமையல் எரிவாயு நிறுவனங்களே பொறுப்பு கூற வேண்டும் என்று தெரிவித்துள்ள போதிலும் , அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளமையே தற்போதுள்ள பிரச்சினையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04