வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி பகுதியிலுள்ள குடிசை ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி பகுதியிலுள்ள குடிசை ஒன்றில் இருந்து நேற்று (4) பிற்பகல் மூன்று மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காயங்கேணி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிவஞானம் குகேஸ் எனும் ஐந்து மாத பிள்ளையின் தந்தை என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிபதி இலவத்தம்பி சஹாப்தீன் விசாரணைகளை மேற்கொண்ட பின், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.