(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வரை பாராளுமன்றத்துக்கு வரமாட்டோம் என தெரிவித்து பிரதான எதிர்க்கட்சி சனிக்கிழமை (4) சபையில் இருந்து வெளி நடப்பு செய்தது.
![]()
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சு,போக்குவரத்து அமைச்சு ,தொழில் அமைச்சு மற்றும் 3ராஜாங்க அமைச்சுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்களால் ஆத்திரமடைந்து ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் சபைக்கு வெளியில் இருந்து தாக்க முயற்சித்துள்ளனர். அதனால் மதிய உணவு வேளைக்கு பிறகு மீண்டும் சபை ஆரம்பித்து சில நிமிடங்களில் எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில்,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றுகையில் 5நிமிடம் மேலதிகமாக கேட்டபோது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் எமது பக்கம் வந்து உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தனர்.
என்றாலும் அந்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடி அதனை முடிவுக்கு காெண்டுவந்தோம். என்றாலும் நேற்று மீண்டும் மனுஷ் நாணயக்காரவின் உரையை அடுத்து, சபைக்கு வெளியில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 15,20 பேர்வரை தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
இவ்வாறான நிலையில் எமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை எமக்கு பாராளுமன்றத்தில் இருக்கமுடியாது.
பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கு பதிலளிப்பதே ஆளும் தரப்பின் பொறுப்பு. அதனை விடுத்து சபையில் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கு சண்டைக்கு வருவதாக இருந்தால் எமக்கு சபைக்கு வரமுடியாது.
பாராளுமன்ற சம்பிரதாயத்தை கடைப்பிக்கவேண்டும். அதனால் எமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வரை நாங்கள் பாராளுமன்றத்துக்கு வரமாட்டோம் என்றார்
இதன்போது எதிர்த்தரப்பு உறுப்பினர்களான ஜே.சி. அலவத்துகொட, நளின் பண்டார, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் தங்களது ஒழுங்கு பிரச்சினையின்போது, சபையில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு சபைக்கு வெளியில் தாக்குதல் நடத்த முயற்சிப்பதென்றால் அது பாரிய பிரச்சினை.
அதனால் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை சபைக்கு வரமுடியாது என தெரிவித்து பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM