(எம்.மனோசித்ரா)

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் யகஹடுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 கிலோ 673 கிராம் கேரள கஞ்சாவை லொறியொன்றில் கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Articles Tagged Under: கைது | Virakesari.lk

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இவரிடமிருந்த கையடக்க தொலைபேசியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு , சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

.