‘கெசல்வத்தை ஃபவாஸ்’ என்ற நபர் நேற்று (04) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் காரில் வந்த குழுவொன்று குறித்த நபரை வெட்டிக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் 32 வயதுடைய கெசல்வத்த ஃபவாஸ் என்பவர் ஆவார்.

இந் நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.