பாகிஸ்தானில் இலங்கை தொழிற்சாலை மேலாளர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதமர் இம்ரான் கான் சனிக்கிழமை தெரிவித்தார்.

Pakistanis paid tribute to the factory managerPakistanis paid tribute to the factory managerPakistanis paid tribute to the factory manager

தாக்குதல் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்த இம்ரான் கான், இது "பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்" என்றும் சுட்டிக்காட்டினார்.

பின்னர் சம்பவம் குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேசியதாகவும் கூறினார்.

100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்டத்தின் முழுக்கடுமையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தென்கிழக்கே 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் உள்ள மத்திய பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிரியந்த குமார என்ற நபர் தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட 120 பேர் வரை கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் AFP செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளனர்.