கொரோனா தொற்றுக்கு 21 பேர் உயிரிழப்பு ! 

04 Dec, 2021 | 07:48 PM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதாரப்பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் நாட்டில் 21 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த்தடுப்புப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று சைனோபாம் முதலாம் கட்டத் தடுப்பூசி 680 பேருக்கும் இரண்டாம் கட்டத் தடுப்பூசி 2408 பேருக்கும் வழங்கப்பட்டிருப்பதுடன் பைஸர்; முதலாம்கட்டத் தடுப்பூசி 1322 பேருக்கும் இரண்டாம் கட்டத்தடுப்பூசி 978 பேருக்கும் மூன்றாம்கட்ட செயலூட்டித்தடுப்பூசி 55,368 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 இத்தரவுகளின் அடிப்படையில் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில் அஸ்ராசெனேகா முதலாம்கட்டத் தடுப்பூசி 1,479,631 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 1,418,593 பேருக்கும் சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 11,948,184 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 10,939,688 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று ஸ்புட்னிக் முதலாம்கட்டத் தடுப்பூசி 159,110 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 155,812 பேருக்கும் பைஸர் முதலாம்கட்டத் தடுப்பூசி 1,545,954 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 462,903 பேருக்கும் மூன்றாம்கட்ட செயலூட்டித்தடுப்பூசி 852,261 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு 804,801 பேருக்கு மொடேனா முதலாம்கட்டத் தடுப்பூசியும் 782,836 பேருக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

தொற்றாளர்களும் மரணங்களும்

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று இதுவரை 541 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 21 கொவிட் - 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 566,737 ஆக அதிகரித்திருப்பதுடன் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 14,440 ஆக உயர்வடைந்துள்ளது. 

மேலும் இன்று மாலை 5.30 மணிவரையான தகவல்களின்படி தொற்றாளர்களில் 542,010 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன், தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்ற மற்றும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,287 ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33