தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னாள் வெங்காயப் பயிற்செய்கையாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வெங்காயத்தின்   கொள்வனவு விலையை அதிகரிக்குமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.