கலைமாமணி பொன். பத்மநாதன்  எழுதிய “பூக்கள் பூக்காத பூந்தோட்டம்” சிறுகதை தொகுப்பு நூல் வெளியிட்டு விழா இடம்பெறவுள்ளது.

குறித்த நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு கொட்டாஞ்சேணை வீதி இல. 60, நீவ் வைஷ்ணவி விகார் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழ் கலைஞர் சங்கமும் சிலோன் யுனெட்டெட்  ஆர்ட் ஸ்டேஜ் இணைந்து நடத்தும் இந்நிகழ்வு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் தேசபந்து லயன், ஆர்.அசோக்குமார் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

வரவேற்புரை கலாபூஷணம் கே.செல்வராஜும் அறிமுகவுரையை கலைஞர் ராதா மேதாவும் நிகழ்த்தவுள்ளனர். நூலின் முதல் பிரதியை சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜசேகரன் பெற்றுக்கொள்வார்.

நயவுரை மூத்த கலைஞர் கலாபூஷணம் கலைச்செல்வனும் ஏற்புரையை பொன்.பத்மநாதனும் தொகுப்புரை அஜித்குமாரும், விஜேய்,  நன்றியுரை கே.ஈஸ்வரலிங்கம் வழங்கவுள்ளனர்.