(க.கிஷாந்தன்)

டிக்கோயா வனராஜா தோட்டத் தொழிலாளர்கள்  நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வனராஜா தோட்ட  பிரதான வீதியில் பேரணியாக வருகை தந்து தொழிற்சாலைக்கு முன்பாக  குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

“நியாயமான சம்பளத்தை சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்டக் கம்பனிகள் முன்வரவேண்டும்'   'அரசாங்கம் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு உடனடியாக தீர்வை பெற்றுத்தர வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது பாதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர்.

இதேவேளை வனராஜா தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரிடம் மகஜரொன்றை கையளித்ததுடன் உரிய தீர்வை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.