(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மஹரகமவிலுள்ள இளைஞர் சேவைகள் உள்ளக அரங்கில் ந‍டைபெறவுள்ளது.

image_8d0e30c266.jpg

அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ள பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கொஸ்வாடிய விஜய விளையாட்டுக் கழகத்தை கலிகமுவ ஹைட்ராமனி விளையாட்டுக் கழகம் எதிர்த்தாடவுள்ளது.

இதேவேளை, பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆண்களுக்கான இறுதிப் போட்டியில்  நாத்தண்டிய யுனைட்டெட் விளையாட்டுக் கழகம் மற்றும் தேபேகம ரண்த்தரு விளையாட்டு கழகங்கள் மோதிக்கொள்ளவுள்ளன.

கடந்த ஆண்டுகளில் கிண்ணத்தை வென்ற அணிகள் இம்முறை போதிய திறமைகளை வெளிப்படுத்தத் தவறியிருந்தன. 

இதில் 2019 இல் ஆண்கள் பிரிவில் கிண்ணத்தைக் கைப்பற்றிய கம்பஹா சியனே தரு விளையாட்டுக் கழகம் இம்முறை முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தது. 

எவ்வாறாயினும், கடந்த முறை மகளிர் பிரிவில் சம்பியனாகியிருந்த ‍ கோல்டன் பேர்ட்ஸ் கழகம் இம்முறை மூன்றாவது இடத்தைப் பிடித்தது.