மின் துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால் உரிய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - சமல் ராஜபக்ஷ 

By T Yuwaraj

04 Dec, 2021 | 06:37 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு பூராகவும் இடம்பெற்ற மின்துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கின் விவசாய, குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - சமல் ராஜபக்ஷ  சபையில் உறுதி | Virakesari.lk

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டது.  

என்றாலும் இடம்பெற்ற மின்துண்டிப்பு நாடு முழுவதும் இடம்பெற்றிருப்பது அறியவந்ததுடன், சபையில் இருந்த எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெரிவிக்கையில்,

நாடு பூராகவும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது ஏதாவது நாசகார செயலா அல்லது தொழிநுட்ப கோலாறு காரணமாக இடம்பெற்றதா என தேடிப்பார்க்கவேண்டும் என தெரிவித்ததற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடுபூராகவும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது நாசகார செயலாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. நாசகார செயலாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

நாசகார செயல் என்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right