நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று ஆலைகள் முழுமையாக இயங்கும் வரையில் அடுத்த சில நாட்கள் இலங்கையின் பல பகுதிகளில் குறுகிய நேர மின்சார தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்நிலையத்தை தவிர்ந்த ஏனைய சகல மின்நிலையங்களின் மின் விநியோகங்களும் இன்று மாலை 5.40 மணியளவில் வழமைக்கு திரும்பியுள்ளன.

எனினும் நுரைச்சோலை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறை சீர் செய்வதற்க மேலும் இரண்டு நாட்களேனும் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.