(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்திய மீனவர்கள் வடக்கு கிழக்கில் அவர்களின் ஆக்கிரமிப்பை நிகழ்ந்துகொண்டுள்ளது. எனவே எமது கடற்படைக்கு ஆயுதம் வழங்கியேனும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்திய மீனவர்கள் வடக்கின் கடலை அழித்துக்கொண்டுள்ளனர், வடக்கு கிழக்கில் அவர்களின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்துகொண்டுள்ளது.

நாகதீபம் பக்கம் சென்றால் இவற்றை எம்மால் அவதானிக்க முடியும். இந்த செயற்பாடுகளை நிறுத்தியாக வேண்டும். அதற்கான அனுமதியை எமது கடற்படைக்கு வழங்க வேண்டும். இந்திய மீனவர்கள் எமது மீனவர்களை தாக்குவதும், பீன்பிடி உபகரணங்களை அழிக்கின்றனர் என்றால் அந்த அசம்பாவிதங்களை நிறுத்த வேண்டும்.

நாம் சிறிய நாடு என்பதற்காக இந்தியா செய்வதையெல்லாம் எம்மால் அமைதியாக வெடிக்க பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பெரிய நாடுகளுக்கும் கடமைகள் உள்ளன.

சிறிய நாடாகிய எமது நாட்டை பெரிய நாடுகள் அடக்காது, அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாது இருக்க தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே எமது கடற்படைக்கு ஆயுதம் வழங்கியேனும் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என்றார்.