நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது - ராஜித சேனாரத்ன

Published By: Digital Desk 3

04 Dec, 2021 | 06:45 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கையிருப்பிலுள்ள ஒரு சில மருந்துகளின் விலைகளும் வானளவிற்கு உயர்ந்துள்ளன.

பாம்பு விஷ எதிர்ப்பு  மருந்துகள் உட்பட எயிட்ஸ், இதய நோய், சுவாச நோய், சர்ம நோய், புற்றுநோய் மற்றும் சிறுநீரகநோய் என்பவற்றுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மக்களின் ஆயுளைக் குறைக்க முயற்சிக்காமல் தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சிற்கு 301 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் 2022 ஆம் ஆண்டுக்கு 234 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 66 பில்லியன் ரூபா நிதி குறைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு நிதி குறைக்கப்பட்டுள்ளமையால் அடுத்த ஆண்டு மருந்து மற்றும் மருத்துவ உபகரண விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்படும்.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 125 மில்லியன் ரூபா தற்போது 65 மில்லியன் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. அதே போன்று ஆயுர்வேததுறைக்கான நிதி 700 மில்லியன் ரூபாவிலிருந்து 100 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது. 

மருத்துவ துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் கொவிட் வைரஸின் ஐந்தாவது பிறழ்வாக 'ஒமிக்ரோன்' பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது. 

எனவே ஏற்கனவே பெற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறையேறும் விமான நிலையங்களை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கொவிட் பரவலில் மிக மோசமான 224 நாடுகள் பட்டியலில் இலங்கை 58 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சுமார் 160 நாடுகள் இலங்கையை விட சிறந்த நாடுகளாகவுள்ளன. 

அத்தோடு தடுப்பூசி வழங்கலில் உலகில் முன்னணி நாடாகக் காணப்பட்ட இலங்கை தற்போது 39 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் 19 ஆவது இடத்தில் உள்ளது. 

ஆரம்பத்தில் இலங்கை முதலிடத்திலும் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் காணப்பட்டது. தற்போது 38 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளமையை வெட்கத்திற்குரியது.

இலங்கையில் சரியான நேரத்தில் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படாமையே இதற்கான காரணமாகும். இதன் காரணமாகவே தற்போது 14 000 உயிர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளன. நாம் ஆட்சியில் இருந்திருந்தால் ஒரு மரணம் கூட பதிவாகியிருக்காது. 

சர்வதேச மதிப்பீடுகளின் படி இலங்கையில் ஒரு மில்லியன் பேருக்கு 668 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மாலைத்தீவில்  ஒரு மில்லியன் பேருக்கு 453 பேரும் , இந்தியாவில் 336 பேரும், ஆப்கானிஸ்தானில் 182 பேரும், பங்களாதேஷில் 168 பேரும், பாக்கிஸ்தானில் 127 பேரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடும் நிலவுகிறது. இருக்கின்ற ஒரு சில மருந்துகளின் விலைகளும் வானளவிற்கு உயர்ந்துள்ளது. 

பாம்பு கொத்தினால் வழங்கப்படும் மருந்துகள் உட்பட எயிட்ஸ், இதய நோய், சுவாச நோய், சர்ம நோய், புற்றுநோய் மற்றும் சிறுநீரகநோய் என்பவற்றுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

எனவே மக்களின் ஆயுளைக் குறைக்க முயற்சிக்காமல் தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53