பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளன.

இந்த தகவலை பாரிஸில் அமைந்துள்ள எலிசி அரண்மனை உறுதிபடுத்தியுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் விளைவு என்று பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான ரஃபேல் விமானங்கள் தவிர, 12 கராகல் (ஏர்பஸ்) ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலும் எமிரேட்ஸ் கையெழுத்திட்டுள்ளது.