இலங்கை தற்போது நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை எதிர்கொண்டுள்ளது. 

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார விநியோகத்தை மீட்டெடுப்பது சவாலான பணியாக இருப்பதால், குறைந்தது இன்னும் 3 மணி நேரத்திற்குள் நாடு முழுவதுமான மின்சாரம் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்றும் மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நவம்பர் 29 ஆம் திகதி, கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் இவ்வாறு தடைபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.