இந்திய அணியின்  இடதுகை துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

நியுஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர் நியுஸிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மிகுதி டெஸ்ட் போட்டிகளுக்காக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கம்பீர்  இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு இவர் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.