இலங்கை தற்போது நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை எதிர்கொண்டுள்ளது.

தேசிய கட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் 03 துணை மின் நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சட்டப்படி வேலை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையிலேயே இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 08 மணித்தியாலங்கள் மாத்திரமே பணிக்கு சமூகமளிப்பதாக அறிவித்துள்ளனர்.

கெரவலபிட்டியவில் உள்ள அரசுக்கு சொந்தமான யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.