திருகோணமலையில் புதையல் தோன்டிய குற்றச்சாட்டில் எட்டு சந்தேக நபர்கள்  கைது

Published By: Vishnu

03 Dec, 2021 | 11:08 AM
image

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு சந்தேக நபர்களை  இன்று(3) அதிகாலையில் கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோப்பூர்,கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 45 வயதிலிருந்து 65 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வெருகல், மாவடிச்சேனை பகுதியில் வீடு ஒன்றில் புதையல் தோன்டிய போதே வெருகல் பகுதியிலுள்ள இராணுவ புலனாய்வு பகுதியினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து எட்டு சந்தேக நபர்களை கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மண்வெட்டி 2,அலவாங்கு1,சவல்2,கேன் போத்தல்1, தாச்சு1, பிக்காசு1, பானை1 மற்றும் மோட்டார் சைக்கிள் 2போன்றவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57
news-image

நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம்...

2025-11-08 04:51:39