கொவிட்-19 இன் மிகவும் ஆபத்தான ஒமிக்ரோனின் முதல் தொற்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய இலங்கை பிரஜை ஒருவர் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் பூஸ்டர் டோஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதானல், அது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர நேற்யை தினம் தெரிவித்துள்ளார்.

அதேநேர் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தையும், பொது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.

புதிய கொவிட் மாறுபாடான ஒமிக்ரோன் முதன்முதலில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது.

30 க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது ஒமிக்ரோன் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணத் தடைகள் தென்னாபிரிக்கா உட்பட பல ஆபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.