இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 297 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.

Image

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள், இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இலங்கை 187 ஓட்டங்களினால் வெற்றி பெற, இரண்டாவது போட்டி நவம்பர் 03 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ம 61.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸுக்காக 204 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 253 ஓட்டங்களை பெற்றது.

49 ஓட்ட பின்னடைவுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கையின் மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களும் 73 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

எனினும் பத்தும் நிஸ்ஸாங்க அரைசதம் பெற்று 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதேநேரம் தனஞ்சய டிசில்வா 153 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

ஒன்பதாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த லசித் எம்புல்தெனிய - தனஞ்சய டிசில்வா ஜோடியினர் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தனர். 

தனஞ்சய டிசில்வா 259 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 153 ஓட்டங்களுடனும், அவருக்கு உறுதுணையாக இருந்த எம்புல்தெனிய 110 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

Image

இந் நிலையில் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க எம்புல்தெனிய ஹோல்டரின் பந்து வீச்சில் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் இலங்கை அணியினர் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 345 ஓட்டங்களை பெற்று டிக்ளே செய்தனர்.

இந் நிலையில் 297 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத்தீவுகள் சற்று முன்னர் வரை 10 ஓவர்கள் நிறைவுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 19 ஓட்டங்களை பெற்றுள்ளது.