இலங்கை மண்ணில் முதலாவது டெஸ்ட் வெற்றியை ஈட்ட முடியும் என்ற மேற்கிந்தியத் தீவுகளின் நம்பிக்கையை தனஞ்சய டி சில்வாவின் அபார சதம் தகர்த்துள்ளது.

Dhananjaya de Silva celebrates his hundred, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 4th day, December 2, 2021

காலியில் நடைபெற்று வரும் 2 ஆவது கடைசியமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் 3 நாட்களில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன.

ஆனால். நான்காம் நாளான வியாழக்கிழமை தனஞ்சய டி சில்வா குவித்த அபார சதமும் பிரிக்கப்படாத 9 ஆவது விக்கெட்டில் லசித் எம்புல்தெனியவுடன் அவர் பகிர்ந்த 107 ஓட்டங்களும் ஆட்டத்தின் பிடியை இலங்கை பக்கம் திருப்பியுள்ளன.

Ramesh Mendis drives down the ground, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 4th day, December 2, 2021

இவர்கள் இருவரும் நிதானத்துடன் கூடிய துடுப்பாட்டங்களின் உதவியுடன் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அதன் 2 ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 328 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

Roston Chase is congratulated after sending back Pathum Nissanka, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 4th day, December 2, 2021

தனஞ்சய டி சில்வா 11 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 153 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய லசித் எம்புல்தெனிய ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

போட்டியின் 4 ஆம் நாள் காலையில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தனது 2 ஆவது இன்னிங்ஸை இலங்கை  தொடர்ந்தது.  

Dhananjaya de Silva is a little off-balance as he attempts a cut, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 4th day, December 2, 2021

சரித் அசலன்க (19) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் தனஞ்சய டி சில்வாவும் 4 ஆவது 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர்.

Pathum Nissanka cuts past the keeper, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 4th day, December 2, 2021

பெத்தும் நிஸ்ஸன்க 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் தினேஷ் சந்திமால் (2), ரமேஷ் மெண்டிஸ் (25), சுரங்க லக்மால் (7), ஏஞ்சலோ மெத்யூஸ் (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். (221 க்கு 8 விக்.)

அதன் பின்னர் தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்த எம்புல்தெனிய பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி சக வீரர் சதம் குவிப்பதற்கு உதவினார்.

Veerasammy Permaul picked up the first wicket of the day, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 4th day, December 2, 2021

தனது 38 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தனஞ்சய டி சில்வா 8 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: 204 (பெத்தும் நிஸ்ஸன்க 73, திமுத் கருணாரட்ன 42, ஏஞ்சலோ மெத்யூஸ் 29, வீராசாமி பேர்மோல் 35 - 5 விக்., ஜோமெல் வொரிக்கன் 50 - 4 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 253 (க்ரெய்க் ப்றத்வெய்ட் 72, ஜேர்மெய்ன் ப்ளக்வூட் 44, கய்ல் மேயர்ஸ் 36 ஆ.இ., நிக்ருமா பொன்னர் 35, ரமேஷ் மெண்டிஸ் 70 - 6 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 328 - 8 விக். (தனஞ்சய டி சில்வா 153 ஆ.இ., பெத்தும் நிஸ்ஸன்க 66, லசித் எம்புல்தெனிய 25 ஆ.இ., வீராசாமி பேர்மோல் 100 - 3 விக்.)

வெள்ளிக்கிழமை போட்டியின் இறுதி நாளாகும்.