(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்பவங்களினால் நுகர்வோர் அச்சம் கொண்டுள்ளமை நியாயமானது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

தற்போதைய பிரச்சினைக்கு அறிவியல் பூர்வமாக தீர்வு காண்பது அவசியமாகும்.எரிவாயு சிலிண்டருடன் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களில் காணப்பட்ட பிரச்சினை தற்போது சிலிண்டர் பிரச்சினையாகி விட்டது.

Litro Gas Lanka - Home | Facebook

இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மாதிரிகளை இந்தியாவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு பரிசோதனை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளோம்.

மூன்றாம் தரப்பினரிடமிருந்து அறிக்கை பெறுவது அவசியமாகும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஸார ஜயசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுள்ளதாவது,

எரிவாயு சிலிண்டருடன் பொருத்தப்பட்டு;ள்ள உபகரணங்களில் காணப்படும் பிரச்சினை தற்போது சிலிண்டரின் பிரச்சினை என்ற அளவிற்கு நிலைமை எல்லை கடந்துள்ளது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன.ஆனால் அப்போது இந்தளவிற்கு கவனம் செலுத்தப்படவில்லை.தற்போது அதிகம் கவனம் செலுத்தப்படுவது; நன்மையானதே,

எரிவாயு சிலிண்டரின் கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு தரப்பினர் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

கடந்த மூன்று மாத காலமாக இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுகளின் தரம் தொடர்பிலான அறிக்கைகளை நேற்று முன்தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற வர்த்தக அமைச்சுசார் ஆலோசனை குழு கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

இரண்டு வருட கால ஒப்பந்தத்திற்கமைய வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து எரிவாயுக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

எரிவாயுவில் புரோப்பேன் 60 சதவீதம் தொடக்கம் 75 சதவீதம் வரையிலும்,பியுடென் 25 சதவீதம் தொடக்கம் 45 சதவீத அளவு கட்டமைப்பில் உள்ளடங்கப்பட வேண்டும் என சர்வதேச தொழினுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்ட எரிவாயு கப்பலுக்கு ஏற்றுவதற்கு முன்னரும்,நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்;டதன் பின்னரும் முறையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த்தப்படுகிறது.

லிட்ரோ நிறுவன தலைவராக நான் கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி நியமிக்கப்பட்டேன்.அதன் பின்னர்  எரிவாயு கலவையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியாக குறிப்பிட முடியும்.

கடந்த ஏப்ரல் மாதம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் 18 லீற்றர் அடங்கிய 9.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் லிட்ரோ ரக எரிவாயு உற்பத்திகள் சர்ச்சைக்குள்ளாகுவதற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

18 லீட்டர் எரிவாயு சிலிண்டரின் நிறை குறைக்கப்பட்டது ஆனால் விலை குறைக்கப்படவில்லை.அதற்கு நுகர்வோர் அதிகார சபையினர் சட்டநடவடிக்கைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்கள் அனைத்தும் மீள பெற்றுக் கொள்ளப்பட்டன.

சமையல் எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்பவங்களினால் நுகர்வோர் அச்சம் கொண்டுள்ளமை நியாயமானது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.தற்போதைய பிரச்சினையைக்கு அறிவியல் பூர்வமாக தீர்வு காண்பது அவசியமாகும்.

எரிவாயு சிலிண்டருடன் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களில் காணப்பட்ட பிரச்சினை தற்போது சிலிண்டர் பிரச்சினையாகி விட்டது.

இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மாதிரிகளை இந்தியாவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு பரிசோதனை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளோம்.மூன்றாம் தரப்பினரிடமிருந்து அறிக்கை பெறுவது அவசியமாகும் என்றார்.