எரிவாயு சிலிண்டர் வெடிப்பின் பின்னால் அரசாங்கம் - சந்தேகம் வெளியிட்டார் ஹரீன் பெர்னாண்டோ

By T Yuwaraj

02 Dec, 2021 | 09:47 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் விளையாடி அரசாங்கத்தை பெற்றவர்களுக்கு இந்த எரிவாயு சிலிண்டர்களை வெடிக்க வைப்பது பெரிய விடயமல்ல என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதன் பின்னணியில் லிட்ரோ நிறுவனத்தை விற்பதற்கான திட்டம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: ஹரின் பெர்ணான்டோ | Virakesari.lk

இதனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பின் பின்னால் அரசாங்கம் இருக்கின்றதா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

துறைமுகங்கள் நாட்டுக்கு வருமானங்களை கொண்டு வரும் இடமாக இருக்கின்றது. சர்வதேச நாடுகள் வருடத்துக்கு 900 மில்லியன் கொள்கலன்களை பயன்படுத்துகின்றன.

ஆனால் இலங்கை இன்னும் 7 மில்லியன் கொள்கலன்களையே பயன்படுத்துகின்றன. இதேவேளை இலங்கைக்கு வரும் வர்த்தகங்களில் 70வீதமானவை இடைமாறல் கப்பல்கள் ஊடாகவே நடக்கின்றன. வேறு நாடுகளுக்கு செல்லும் கப்பல்களே இங்கு வந்து செல்கின்றன.

போட்டிகளுடன் பார்க்கும் போது சீன நிறுவனத்திடம் இருக்கும் துறைமுக நடவடிக்கைகள் மூலம் அதன் இலாபம் எங்களுக்கு வருவதில்லை.

சீனாவுக்கே செல்லும். அந்த வகையில் அம்பாந்தோட்டை துறைமுகம் பாரியளவில் வட்டிக்கு கடன் பெற்றே அமைக்கப்பட்டது. உகண்டாவில் விமான நிலையம் சீனாவிடம் கடன்பெற்று அமைத்தபோது, கடனை மீள வழங்க முடியாமல்,  உகண்டாவின் விமான நிலையத்தை சீனா பெற்றுக்கொண்டுள்ளது.

உலகின் தரப்பட்டியலில் சீனாவின் சென்காய் துறைமுகமே முதலிடத்தில் உள்ளது. இலங்கை 25 ஆவது இடத்திலேயே இருக்கின்றது.

இந்நிலையில் சீனாவின் வியாபார உத்தியின்படி கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வராது சீனாவின் கீழுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் நிலைமையே ஏற்படும்.

அதனால் எமது துறைமுகத்தின் தேவைப்பாடு இல்லாமல்போகும். துறைமுகத்துக்கு தேவையான புதிய சட்டங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை 1978ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சட்டமே இன்னும் இருக்கின்றது. 

இந்தியாவில் அதானி நிறுவனம் பல துறைமுகங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.இலங்கையிலும் அமைத்தால் இந்தியாவி்டம் எமக்கு வரும் வியாபாரத்தில் 75வீதம் இல்லாமல்பாேகும்.

அந்த நெருக்கடி எமக்கு ஏற்படும். அதனால் அதற்கு முகம்கொடுக்க எமது வளங்களை அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் . இல்லாவிட்டால் துறைமுகத்தை மூடிவிட்டு, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் விற்றுவிடுங்கள்.

தற்போது நாட்டில் எரிவாயு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கப்பல்கள் மூலமே எரிவாயு வருகின்றன. இந்நிலையில் எரிவாயுவில் புரோப்பைன் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புரோப்பைன் என்பது 40 டொலர்கள் அதிகமாகும். எரிவாயுவையே கொண்டு வர முடியாத நிலையில் இருக்கும் நாங்கள் ஏன் புரோப்பைன் 50 க்கு 50 என்று அதில் உள்ளடக்கி வெடிக்கச் செய்ய வேண்டும்.

கப்பல்களில் இருந்து இறக்கும் போது காணப்படும் கலலை தொடர்பில் ஏற்றும் போதும், இறக்கும் போதும் பார்க்கப்படுகின்றது. அதனால் இங்கு எங்கேயாவது விளையாட்டு செயற்பாடு உள்ளது. அண்மையில் லிட்ரோ நிறுவனம் விலை மதிப்பீடு செய்கின்றது. இதன்படி ஒருபக்கத்தில் அதனை விற்பதற்கு முயற்சிக்கப்படுவதுடன் மறுபக்கத்தில் எரிவாயுவுக்கான கேள்விகள் குறைக்கப்படுகின்றன.

இதனால் மக்கள் விறகு, மின்சார அடுப்பு ஆகியவற்றுக்கு செல்வதுடன், அரசாங்கத்திற்கு எரிவாயுக்கு பணம் செலவழிக்கவேண்டிய தேவை ஏற்படுவதில்லை. இதில் முக்கிய விடயம் என்னசென்றால்,  லாபமடைந்த நிறுவனமான லிட்ரோ அவசரமாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது எதற்கு? லிட்ரோவை விற்பதற்கான பாதையை வெட்டுவதற்காகவா எமது அப்பாவி மக்களின் வீடுகளில் சிலிண்டர்கள் வெடிக்கின்றன. தொழில்நுட்ப பக்கம் தொடர்பில் கதைக்கின்றனர். அவ்வாறு இல்லை. இது உயிருடன் விளையாடும் செயற்பாடாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் விளையாடி அரசாங்கத்தை பெற்றவர்களுக்கு இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது பெரியவிடயமல்ல. இது தொடர்பாக ஆராய்ந்து பாருங்கள். லிட்ரோ நிறுவனத்தை விற்பதற்கு முயலும் விளையாட்டின் ஆரம்பமே எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு. இந்த நேரத்தில் அவசரமாக லிட்ரோ தொடர்பில் எதற்கு மதிப்பீடு செய்து கேள்வி மனுக்கோரல் செய்ய வேண்டும்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் போது அதற்கான கேள்விகள் குறைவடையும். பணம் உள்ளவர் இலத்திரனியல் உபகரணத்திற்கு செல்லும். மற்றையவர் விறகு அடுப்புக்கு செல்ல நேரிடும். இதன்போது எரிவாயுவுக்காக செலுத்த வேண்டிய தொகை குறைவடையும். இதுதான் 7 அறிவுடையவரின் வேலை. சிறந்த மூளை. இவ்வாறு செய்து லிட்ரோவை விற்க வேண்டுமாயின் 7 அறிவுள்ளவர்கள் வேண்டும்.ஆகவே எரிவாயு சிலிண்டர் வெடிப்பின் பின்னால் அரசாங்கம் இருக்கின்றதா? என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17...

2022-11-28 16:54:25
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அழைப்பில் அலி...

2022-11-28 16:49:52
news-image

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

2022-11-28 16:45:50
news-image

காரை நகரில் நில அளவை மக்களின்...

2022-11-28 16:38:14
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:34:19
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55
news-image

மக்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள்...

2022-11-28 15:02:21