(ஆர்.யசி)

கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்த வீதம் அதிகமாக உள்ள போதிலும் அண்மைக்கால பெறுபேறுகளுக்கு அமைய தடுப்பூசி பெற்றுக்கொண்டும் மரணத்தை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையில் 30 வீத அதிகரிப்பை காட்டுகின்றது என சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  கூறும் அறிவுரை | Virakesari.lk

ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில்,

இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு மூன்றாம் தடுபூசியாக பூஸ்டர் தடுப்பூசியாக 7 இலட்சத்து 27 ஆயிரத்து 370 தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சுகாதார தரப்பினருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கும் அப்பால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சிறுவர்கள், வெவ்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் என வெவ்வேறு கட்டங்களில் இவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இதுவரை 35.7 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன, அவற்றில் 30.4 மில்லியன் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 62.7 வீதமான மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் 72 வீதமானவர்கள் முதலாம் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர். விரைவில் இந்த வீதம் அதிகரிக்கும் என நம்புகின்றோம்.

கொவிட் மரணங்களை அவதானிக்கும் வேளையில் 81வீதமான மரணங்கள் ஏதேனும் தாக்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள், அதேபோல் ஏற்றியும் பாரதூரமான நோய் தாக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களே 18 வீதமான மரணங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

அதேபோல் 69 வீதமான மரணங்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும் நாட்டில் தடுப்பூசி பெற்றுக்கொண்டும் மரணத்தை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுகின்றது. 30 வீதமானவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டும் மரணித்துள்ள நபர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நிம்மதி பெருமூச்சி விடும் காரணம் அல்ல, எனினும் மக்கள் பலர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர். எனினும் ஒரு சிலர் விடும் தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.