கொவிட்-19 இன் மிகவும் ஆபத்தான மாறுபாடான ஒமிக்ரோன் தொடர்பான இரு தொற்றுக்கள் தமது நாட்டில் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு தொற்றுகளும் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன. 

நோயாளிகளில் ஒருவர் 66 வயது, மற்றையவர் 46 வயதுடையவர் என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான புதிய பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.