(ஆர்.யசி)
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்கினால் மக்களினதும், நாட்டினதும் வருமான வழிகளே இல்லாமல் போகும் எனவும், நாட்டை முடக்காது சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுப்பதே சிறந்ததாக இருக்குமெனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டை முடக்கினால் வைரஸை கட்டுப்படுத்த முடியுமென்று கூறினர். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நாட்டை மூடினோம்.இதனால் தொற்றாளர் எண்ணிக்கை பூச்சியம் வரையில் குறைந்தாலும் திறந்த பின்னர் மீண்டும் அதிகரித்தது.
இதன்போது மீண்டும் மூடும் நிலை உருவானது. இவ்வாறு நாட்டை மூடும் போது மக்களின் வாழ்வாதரமே பாதிக்கப்படும். நாட்டை மூடியிருந்த போது மக்கள் தமது பிரச்சனைகளை கூறியுள்ளனர்.
அத்துடன் சுற்றுலாத்துறையை எடுத்துக்கொண்டால் அவர்களின் மூலம் மட்டுமே தொற்று ஏற்படவில்லை. இதனை விடவும் நாட்டுக்குள் வைரஸ் வருவதற்கான வழிகள் உள்ளன.
இதனால் சுற்றுலாத்துறையினர் வருவதை தடுப்பதன் மூலம் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்த முடியுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சு இல்லை. சுற்றுலாப் பயணிகள் முறையாக சுகாதார ஒழுங்குவிதிகளுடன் இருந்தால் அவ்வாறான பிரச்சனை ஏற்படாது.
அதேபோன்று நோயை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை மூடி வருமான வழிகளை மூடுகின்றோம். மக்களுக்கு உணவுக்கு பணம், மருந்து கொள்வனவுக்கான பணம் இல்லாமல் போகும்.
அதன்படி அங்கு வரும் வருமானம் இங்கு இல்லாமல் போவதை பார்க்கும் போது இதனை நியாயப்படுத்த முடியுமாக இருக்கும். இதன்படி நாட்டை மூடாது ஒழுங்குவிதிகளை பின்பற்றி செய்தால் அனைத்தையும் முன்னெடுக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM