ஆறு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவருக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி

Published By: Digital Desk 3

02 Dec, 2021 | 02:30 PM
image

(பாராளுமன்ற செய்தியாளர்)

ஆறு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நேற்று இடம்பெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் தென்னாபிரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக பேராசிரியர் காமினி குணவர்தன அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக எம்.என்.பி. ஹபுஹின்ன அவர்களுக்கும், களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.டி. மாதரராச்சி அவர்களுக்கும் உயர் பதவிகள் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கம்பனி தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள், தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜே.எம். திலகரத்ன பண்டா அவர்களையும், சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ்.டீ. கொடிகார அவர்களையும் நியமிப்பதற்கு இந்தக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ்.எச். ஹரிஸ்சந்ர அவர்களை நியமிப்பதற்கும் சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக கே.எச்.டி.கே. சமரகோன் அவர்களை நியமிப்பதற்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2016 பின் அரச சேவையில் இணைந்த...

2026-03-10 18:45:19
news-image

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது...

2026-03-10 18:03:54
news-image

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக...

2026-03-10 17:50:29
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான...

2026-03-10 17:53:16
news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26