(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை 70 ஆண்டுகளுக்கே செய்துகொள்ளப்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய வேளையில் அதனை மறுத்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இது 99 ஆண்டுகால ஒப்பந்தம் என்றார்.
இதனால் குறித்த ஒப்பந்தம் 70 ஆண்டுகளா? அல்லது 99 ஆண்டுகளா? என்பது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை மாற்றமின்றி முன்னெடுத்து செல்ல ஜனதிபதி மற்றும் பிரதமர் இணங்கியதாக ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற துறைமுகங்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக, ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை விவகாரம் குறித்து சில காரணிகளை முன்வைத்தார். இதன்போது அவர் கூறுகையில்,
ஒரு வளத்தை குத்தகைக்கு வழங்கும் போதும் 33 ஆண்டுகளுக்கு மேல் ஒரு தரப்புக்கு குத்தகைக்கு கொடுக்கும் போதும் அது உருத்துரிமை என்றே கருதப்படும். அதனை மீள பெற்றுக்கொள்ள முடியாது.
அவ்வாறு ஒரு வளத்தை கொடுத்து மீண்டும் பெற்றுக்கொண்ட ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூற முடியுமா?
ப்ரீமா நிறுவனத்தை பிரித்தானியா நிறுவனமொன்றுக்கு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதனை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றது அல்லது குத்தகைக்கு கொடுக்க காரணம் என்னவென்றால், நாம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்த முடியாதமையே இதற்கு காரணமாகும்.
ஆனால் பெற்றுக்கொண்ட பணத்தில் கடன்களை செலுத்தவில்லை. பெற்றுக்கொண்ட பணத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொண்டு இன்றும் கடன்களை செலுத்திக்கொண்டுள்ளோம்.
எனவே இந்த விடயங்கள் குறித்து முன்னாள் பிரதமருடன் நான் விவாதத்திற்கு செல்லவில்லை. எமது முன்னாள் தலைவர் அவர். ஆனால் உண்மைகளை கூற வேண்டும் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க:-
இப்போது செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய நாளைக்கே எம்மால் உடன்படிக்கையை நீக்கிவிட்டு துறைமுகத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக நட்டஈடு மட்டுமே செலுத்த வேண்டும்.
அதேபோல் இந்த உடன்படிக்கையில் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டோம். இதனை வெளிநாட்டு கையிருப்பில் சேர்த்தே ஏனைய வர்த்தக கடன் அடைப்புகளை கையாண்டோம் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன :-
இந்த ஒப்பந்தம் 70 ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்படவில்லை, 99 ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் பயனுள்ள அனைத்துமே அவர்களுக்கும், பிரயோசனம் இல்லாத திட்டங்கள் எமக்கும் ஏற்ற வகையில் இது செய்துகொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமருக்கு இது சாதாரண பிரச்சினையாகும். இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நாட்டையே விற்றிருப்பார்கள் என்றார்.
மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ரணில் விக்கிரமசிங்க :-
இப்போது செய்துகொள்ளப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை உடன்படிக்கையை அவ்வாறே முன்னெடுத்து செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணங்கியுள்ளனர்.
ஆகவே இதில் குழப்பம் உள்ளது. எனவே, அமைச்சரவையில் இதனை கவனத்தில் கொள்ளுங்கள். துறைமுக தரப்பு கூச்சளிடுவதற்கு அமைய இதனை செய்ய முடியாது. துறைமுக அதிகாரசபை கூறுவதை கேட்க வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM