இலங்கை இந்திய நாடுகளுக்கு  இடையிலான  பொருளாதார  தொழில்நுட்ப கூட்டுறவு  உடன்படிக்கை  தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாதமளவில்  முடிவடையும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால்   இருதரப்பிலும் காணப்படுகின்ற கரிசனைகள் குறித்து ஆராய்ந்துவிட்டே இறுதி முடிவு எடுக்கப்படும். எட்கா  உடன்படிக்கை  எவ்வளவு  முடியுமோ அவ்வளவு விரைவாக   முன்னெடுக்கவே  முயற்சிக்கின்றோம் என்று  சர்வதேச வர்த்தக மற்றும்  அபிவிருத்தி மூலோபாய அமைச்சர்   மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். 

இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்ட இந்திய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று கொழும்பில் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.