அமெரிக்காவில் முதல் தொற்று பதிவாகிய பின்னர் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தாக்கம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

நவம்பர் 22 அன்று தென்னாபிரிக்காவிலிருந்து கலிபோர்னியாவுக்கு திரும்பிய முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் ஒருவர் ஏழு நாட்களுக்குப் பிறகு ஒமிக்ரோன் தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்துள்ளார்.

இந்த குளிர்காலத்தில் கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்க மூலோபாயத்தில் ஜனாதிபதி ஜோ பிடன் பணியாற்றி வருகிறார்.

மேலும் இது குறித்து விவரித்த ஆதாரங்கள் மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை பயணிகள் முகக் கவசங்களை அணிவதற்கான தேவைகளை நீட்டிக்கும் என்று கூறுகிறது.

அதேசேரம் சர்வதேச பயணிகளுக்கு கடுமையான சோதனை விதிகளை அறிவிக்கவும் வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில் ஃபைசருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசியானது ஒமிக்ரோன் தொடர்பான கடுமையான நோய்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பயோஎன்டெக்கின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.