புத்தளம் - பாலாவியில் எரிவாயு கசிவினால் வெடிப்பு

By T. Saranya

02 Dec, 2021 | 02:00 PM
image

புத்தளம்  பாலாவி கரம்பை ஹூதா பள்ளி வீதியில் அல்ஹூதா பலர் பாடசாலைக்கு முன்பாக உள்ள உணவகத்தில்  இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவால் அடுப்பு முழுமையாக வெடித்துச் சிதறியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (01) பகல் இடம்பெற்றுள்ளது.

 


எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சமையல் எரிவாயுவின் ரெகுலேட்டர் மேல் பகுதியில் தீப்பிடித்த நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடியில் தயாரிக்கப்பட்ட எரிவாயு அடுப்பிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த உணவகத்தின் உரிமையாளர் மாத்திரமே இருந்துள்ளார்.

உணவகத்தில் மாலை நேரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்த போது, சமையலறையில் திடீரெ வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் கூறினார்.

அத்துடன், அடுப்பிலிருந்து ரொகுலேட்டரை கழற்றிய போது சமையல் எரிவாயு சிலிண்டரில் தீப்பிடித்ததுடன், பொங்கிய நிலையில் குமிழ்கள் வெளியே வந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும், சிறிய அளவில் இவ்வாறு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் குறித்த சமையல் எரிவாயு நிறுவன அதிகாரிகளுக்கும், கிராம சேவகருக்கும் அறிவித்துள்ளதாகவும் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right