ஹாலிஎல பாடசாலைக்குள் துப்பாக்கி, தோட்டக்களுடன் நுழைந்த நபர்கள் கைது

By Vishnu

02 Dec, 2021 | 12:26 PM
image

பதுளை - ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றிற்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த மனநல பயிற்றுவிப்பாளர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனநல பயிற்றுவிப்பாளர் நேற்று காலை பாடசாலைக்கு உளவியல் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக வந்திருந்ததாகவும், அவருடன் கறுப்பு உடை அணிந்த மூன்று தனியார் பாதுகாவலர்களும் வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபர்களிடம் துப்பாக்கிகள் மற்றும் 129 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த உளவியல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாகாண அல்லது வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதி பெறப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட ஆலோசகர் எந்தவொரு நிறுவனத்திலும் பதிவு செய்யவில்லை எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சிலாபம் / இரத்மலானை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறானவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right