இலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷிஹிட்டயாகே மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று புதன்கிழமை  பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கோட்டரோ, பொருளாதாரப் பிரிவின் தலைவரும், இரண்டாவது செயலாளர் இமாயி கயோரி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.