(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாட்டின் முன்னணி கழகங்கள்  பங்கேற்றிருந்த  மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், ராகம கிரிக்கெட் கழகத்துக்கெதிரான இறுதிப் போட்டியில் ஜெப்ரி வெண்டசேயின் அபாரமான பந்துவீச்சு கைகொடுக்க தமிழ் யூனியன் கழகம் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்று  சம்பியன் பட்டத்தை வென்றது. 

26 கழகங்கள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு  இறுதிப்போட்டிக்கு தமிழ் யூனியன் கழகம் மற்றும் ராகம கிரிக்கெட் கழகம் ஆகியன முன்னேறியிருந்தன. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ராகம கிரிக்கெட் கழகத்தின் அணித்தலைவரான இஷான் ஜயரத்ன முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். 

Champion-team-696x464.jpg

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய தமிழ் யூனியன் அணியை சந்தூஷ் குணத்திலக்க (47),  சுப்புன் காவிந்த, அணித்தலைவர் சதீர சமரவிக்ரம (34) ஆகியோர்  சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.  பந்துவீச்சில் கல்ஹார சேனாரத்ன, இஷான் ஜயரட்ன, ஜனக்க சம்பத், நிப்புன் மாலிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் கழகம் 32.4 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. ‍ ஆரம்ப விக்கெட்டுக்காக இணைந்த நிஷான் மதுஷ்க, சமிந்த பெர்ணான்டோ ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர். இவர்கள் 10.5 ஓவர்களில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. அதன்பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்களில் அணித்தலைவர் இஷான் ஜயரத்னவைத் (26) ‍வேறு எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. 

இதன் காரணமாக அவ்வணி 32.5 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. 

பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளரமான ஜெப்ரி வெண்டர்சே  27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அவரைத் தவிர, திலும் சுதீர, பிரமோத் மதுஷான் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.போட்டியின் ஆட்ட நாயகனாக ஜெப்ரி வெண்டர்சே தெரிவானதுடன், போட்டித் தொடரின் நாயகனாக இராணுவ அணியின் அசேல குணரட்ண தெரிவானார்.