( எஸ்.ஜே.பிரசாத் )

வேலை நிறுத்தங்கள் என்பது எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல.பழக்கப்பட்டது தான். ஆனால் அக்காலத்தில் அதாவது 19 ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில்வாழ்ந்த மக்களுக்கு இது அறிமுகமில்லாத ஒரு சொல் என்பது நிச்சயமாக சொல்லலாம்.

இந்த காலகட்டத்தில் பல வேலைநிறுத்தங்கள் தொடங்கப்பட்டாலும்,அவை மிகவும் வெற்றிகரமானதாக இருக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவேலைநிறுத்தங்கள் நடந்தாலும் அது அப்படியே நிறைவேற்றப்பட்டு விட்டதா என்பதுகேள்வியாகவே இருந்தது. 

ஆனால் அந்த நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில், இரண்டு வேலைநிறுத்தங்கள்காலனித்துவ ஆட்சியாளர்களை திக்குமுக்காட வைத்தது. அதுமட்டுமன்றி பெரும் சிரமத்தையும் அவர்களுக்கு இந்தவேலை நிறுத்தங்கள் கொடுத்தன.

அதில் முதலாவது 1893ஆம் ஆண்டு நடைபெற்று அச்சுப் பொறியாளர்களின்வேலை நிறுத்தம். மற்றையது நாம் இன்று பார்க்கப்போகும் சலவைத் தொழிலாளர்களின்வேலை நிறுத்தம். கிடைக்கப் பெரும் தகவல்களின் படி சலவைத் தொழிலாளர்களின்வேலை நிறுத்தம் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நீடித்ததாம்.

வரலாற்றில் மிக நீண்ட காலம் நீடித்த அதேவேளை போராட்டக் குணம்நிறைந்த வேலை நிறுத்தமாகவும் இது பார்க்கப்படுகின்றது. 1896 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கிய இந்த வேலைநிறுத்தமானதுகொழும்பு நகராட்சி மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தினால் உருவானதாம். 

கொழும்பு நகராட்சியினால் கொண்டவரப்பட்ட ஒரு புதிய சட்டத்தின்படி நகரத்தில் உள்ள அனைத்து சேவைகளையும் நகர சபையில் பதிவு செய்ய வேண்டும் என்றுகட்டளையிட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சலவைத் தொழிலாளர்கள் புதிய சட்டத்திற்குஎதிராக அணிவகுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

அத்தகைய பதிவானது சலவை உரிமம் மற்றும் வரிவிதிப்புக்குவழிவகுக்கும் என்று சலவை தொழிலாளர்கள் நம்பினர். அதனால் அந்த்ச் சட்டத்தை ஏற்க மறுத்தனர். அத்தோடு இந்த புதிய சட்டம் இலஞ்சம் கொடுப்பதற்கான கதவைத்திறந்துவிடும் என்பதைனையும் உணர்ந்து அவர்கள் இது ஏற்க மறுத்ததாக குறிப்புகள்சொல்கின்றன.

இதனால் சலவை தொழிலாளர்கள், ஆட்சியாளர்கள் தங்களுக்குஎதிராக கட்டமைக்கும் சவாலை எதிர்கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதென முடிவுசெய்தனர்.

இதற்காக பொல்வத்த பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றைநடத்தினர். கொழும்பின் பேர ஏரிக்கு அருகிலுள்ள பொல்வத்த என்ற நிலம் நாட்டின்பரபரப்பான ஒரு பிரதேசமாம். சுமார் 200 சலவை தொழிலாளர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்றுமதிப்பிடப்பட்டது. இந்த நிலத்தை 1840 இல் அரசாங்கம் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, சலவை தொழிலாளர்கள்தங்கள் எதிர்கால நடவடிக்கைகளுக்காக 3,000 ரூபா பணத்தை நன்கொடையாக திரட்டியுள்ளனர். வேலைநிறுத்தத்தின் போது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதே இந்த நிதியின் சேகரிப்பின்நோக்கம். இந்த முறையில் சலவை தொழிலாளர்களின் எழுச்சி இந்த நாட்டில்நடுத்தர வர்க்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தாதாக சொல்லப்படுகின்றது.

குறிப்பாக, வெளிநாட்டு துருப்புக்கள், உள்ளூர் முதலாளித்துவம்,ஆயுதப்படைகள், கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கும் கப்பல்களின் குழுவினர்,ஆகியோருக்கு சலவை தொழிலாளர்களின் சேவை வழங்கப்பட்டது. இவர்களும் வேலைநிறுத்தத்தினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போதைய ஆளுநராக இருந்த சேர் ஜோசப் வெஸ்ட் ரிட்ஜ்வே வேலைநிறுத்தங்களை சட்டவிரோத மற்றும் தேசத்துரோக செயல் என்று வர்ணித்தார்.

வேலைநிறுத்தம் செய்பவர்கள் நகர சபையுடன் அல்ல, அரசாங்கத்துடனும்அதன் அனைத்து அதிகாரங்களுடனும் போராட வேண்டியிருக்கும் என்று ஆளுநர் மேலும்கர்ஜித்தார். இந்த பின்னணியில், வேலைநிறுத்தம் வெற்றிகரமாக முன்னேறியது. ஒரு சில சலவை தொழிலாளர்கள் தவிர அனைவரும் வேலைநிறுத்தத்தில்இணைந்தனர்.

பொல்வத்தை பகுதியிலிருந்த ஒருவர் மாத்திரம் புதிய சட்டத்தின்கீழ் தன்னை பதிவு செய்துகொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது. அங்கு பெரும்பாலான தோல் பதனிடுபவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனராம்.அவர்கள் கொல்லுப்பிட்டி பொலிஸாரின் பாதுகாப்பில் பணியாற்றி வந்தாலும், அவர்கள்வேலைநிறுத்தக்காரர்களின் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தாக்குதல் மேற்கொண்ட ஒருசிலர் அப்போது பொலிஸாரினால் உடனடியாககைதுசெய்யப்பட்டனராம். இப்படியாக மூன்று வாரங்கள் நீடித்த வேலை நிறுத்தம் இறுதியாகதோல்வியில் முடிந்துள்ளது. பொலிஸ் படைகள், சிறப்பு சேவைகள் மற்றும் இராணுவத்துடன் அதிகாரிகள்போராட்டத்தை ஒடுக்கியதாக சொல்லப்படுகின்றது. படிப்படியாக, சலவைத் தொழிலாளர்கள் தங்களை பதிசெய்துகொள்ள நகர்ந்தனர்.

இருப்பினும், இந்த தோல்வியுற்ற வேலைநிறுத்தத்தின் பல சாதகமானஅம்சங்களும் இருந்துள்ளது. அதில் மிக முகக்கியமானது தொழிலாளர்களிடையே ஒரு வர்க்க உணர்வின்வளர்ச்சி காணப்பட்டதாக சொல்கிறார்கள்.