பஷில் இந்தியாவிற்கு சென்றுள்ளமை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தரிப்பு நிலையத்தை விற்கவா ? - சமிந்த விஜயசிறி

By T Yuwaraj

01 Dec, 2021 | 03:59 PM
image

 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்தரிப்பு நிலையத்தை இந்தியாவிற்கு விற்கும் நோக்கத்திலா மூடப்பட்டுள்ளது ? நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தற்போதைய இந்திய விஜயத்தில் இது கைமாற்றப்படுமா எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் கேள்வி எழுப்பினார்.

Articles Tagged Under: சமிந்த விஜயசிறி | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (01) , வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை கூறினார். அவர் இது குறித்து தெரிவிக்கையில்,

நாட்டில் உர பிரச்சினை இருப்பதாகவும், இறக்குமதி செய்ய மாட்டோம் எனவும் கூறி இப்போது கருப்பு சந்தைக்காரர்களுக்கு உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமையல் எரிவாயு தொடர்பில் பல்வேறு காரணிகளை கூறி, குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எரிவாயு நிறுவனத்தை வேறு எவருக்காவது வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கா தற்போது சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதென்ற சந்தேகமும் எழுந்துள்ளது,  

இதே நிலைமைதான் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்தரிப்பு நிலையத்திற்கும் ஏற்பட்டுள்ளது.அதற்கமைய தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்தரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளன.

சிறிது காலம் சென்றதன் பின்னர் இந்த நிலையம் பழுதடைந்துவிட்டது, இதில் பிரச்சினைகள் காணப்படுவதால் அதனை நடத்திச் செல்ல முடியாது என தெரிவித்து, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எவருக்கும் விற்கப்படும்.

தற்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கையை செய்யத்தான் நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளாரா என்ற கேள்வியும் எழுகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:28:14
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55
news-image

மக்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள்...

2022-11-28 15:02:21
news-image

இலங்கைக்கு நாங்கள் உதவி வழங்கிய பின்னர்...

2022-11-28 14:52:06
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்...

2022-11-28 14:58:30
news-image

100 புகைப்படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ள கோட்டாபயவின்...

2022-11-28 14:25:27
news-image

அரசியல் தீர்வினை ஒரே நாளில் காணலாம்...

2022-11-28 15:11:16