மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன் வீதி பகுதியில் 10 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரை காத்தான்குடி பொலிஸார் நேற்று (26) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் 42 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் னுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.