மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

 

இன்று காலை 10 மணியளவில் தேனிர் தயாரிப்பதாற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய் பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசாருக்கும் கிராம கிராமசேவகர் அலுவலருக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.